வெற்றிகரமான மறுசீரமைப்புக்குப் பின்னர் எலஹெர அணைக்கட்டு மீண்டும் திறப்பு

இலங்கை இராணுவம், மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க எலஹெர அணைக்கட்டு 2025 டிசம்பர் 30, அன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பண்டைய கட்டமைப்பு பெரும் சேதத்துக்கு உள்ளாகியதை தொடர்ந்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை இராணுவ பொறியியல் படையணி மற்றும் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் மீள் நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொண்டனர். இத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த படையினர் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக இராணுவ மருத்துவ அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் வலையமைப்புகளின் பிரதி அமைச்சர் கௌரவ டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் திரு. ஈ.எம்.டி.எஸ். ஏக்கநாயக்க மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியீ பீஎஸ்சீ ஆகியோர் பங்கேற்றனர்.