3 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 நவம்பர் 15 அன்று வெலிகமவில் பாரிய அளவிலான கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்று தேசிய கடற்கரை தூய்மை வாரத்தை ஆதரித்தனர். தூய இலங்கை திட்டத்தின் கீழ் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் கௌரவ அக்ரம் இலியாஸின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், வெலிகம கடற்கரைக்கும் கப்பரதோட்ட பாலத்திற்கும் இடையிலான பகுதியில் இருந்து கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றப்பட்டது.
இந்த முயற்சி நீர் தரத்தைப் பாதுகாத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடலோர மாசுபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டதாகும். அரச அதிகாரிகள், அரச சாரா நிறுவனங்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.