18th May 2026
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் வெளிச்செல்லும் 6வது படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல். சமரதிவக்கர ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2026 மே 14 ஆம் திகதி இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும், அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அனைத்துத் நிலையினருக்கும் உரையாற்றியதுடன், அவர்களுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்ற பிரியாவிடை இரவு விருந்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.