21st April 2026
வான்வழித் தாக்குதல் பயிற்சி எண்: 31-இன் நிறைவு அணிவகுப்பு, 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி அன்று ஏயர்மொபைல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் 53 வது காலாட் படைப்பிரிவின் (பாதுகாப்பு தாக்குதல் படை) தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டி. கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். ஐந்து அதிகாரிகளும் 99 சிப்பாய்கள் இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
அவர்களின் சிறப்பான செயற்பாட்டை அங்கீகரிக்கும் நிமித்தம் பின்வரும் நபர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன:
சிறந்த துப்பாக்கிச் சூட்டு வீரர்
முதலாவது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் பி.எம்.பீ எதிரிவீர
சிறந்த உடற்தகுதி வீரர்
12 வது இலங்கை சிங்க படையணியின் லான்ஸ் கோப்பரல் டி.ஜி.என்.இ. பிரேமச்சந்திர
சிறந்த மாணவர்
முதலாவது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் பி.எம்.பீ எதிரிவீர
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.