26th October 2025
வான் தாக்குதல் பாடநெறி எண்: 30 இன் பயிற்சி நிறைவு அணிவகுப்பு 2025 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஏயர்மொபைல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலாம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.டி. கொடவத்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றனர்.
04 அதிகாரிகள் மற்றும் 102 சிப்பாய்கள் இந்த பாடத்திட்டத்தை பின்பற்றியதுடன், அவர்களில் சிறந்த செயற்திறனுக்காக பின்வரும் நபர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
• சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் – 1 வது விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் டி.எம்.சீ.சீ.பி. புஸ்ஸல்ல.
• சிறந்த உடற்தகுதி மாணவர் – 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் காலாட் சிப்பாய் ஆர்.எம். ரத்நாயக்க.
• சிறந்த மாணவர் – 5 வது கெமுனு ஹேவா படையணியின் சார்ஜன் டபிள்யூ.எம்.எஸ். பிரியந்த.