14th August 2025
இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவு, ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் நிறுவனத்திற்குள் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, 2025 ஏப்ரல் 01 அன்று நிறுவப்பட்டதுடன், அதன் இரண்டாவது முன்னேற்ற ஒருங்கிணைப்பு மாநாடு இன்று (2025 ஆகஸ்ட் 12) இராணுவ பதவி நிலை பிரதானி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் உள்ளக விவகார பிரிவு தலைவருமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் மாநாட்டிக்கு தலைமை தாங்கி நேர்மை அதிகாரியாகப் பணியாற்றினார். மொத்தம் 16 குழு உறுப்பினர்கள் பங்கேற்று, நடந்து வரும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, தற்போதைய நேர்மையை மேம்படுத்தும் முயற்சிகளை மதிப்பீடு செய்ததுடன் அனைத்து இராணுவ அமைப்புகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அடையாளம் கண்டனர்.
கலந்துரையாடலின் போது, நல்லாட்சி குறித்த தேசிய கொள்கைகளுக்கு இணங்க, இராணுவத்தின் முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், செயல்பாட்டு நடைமுறைகளை மிக உயர்ந்த நெறிமுறை தரங்களுடன் சீரமைப்பதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை உறுப்பினர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
உள்ளக விவகார பிரிவு, முன்னெச்சரிக்கை கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஒழுக்கத்தை வலுப்படுத்துதல், நிறுவன நம்பிக்கையைப் பேணுதல் மற்றும் இலங்கை இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.