தூய இலங்கை திட்டத்திற்கு ஆதரவாக இராணுவத்தினால் நாடு முழுவதும் இரண்டு நாள் தூய்மையாக்கும் பணி

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவம் 2025 ஜூலை 03 மற்றும் 04 ஆகிய திகதிகளில் அனைத்து இராணுவ முகாம்களிலும் இரண்டு நாள் சிரமதான திட்டத்தைத் மேற்கொண்டது.

முகாம் சுற்றுச்சூழலில் தூய்மை, ஒழுங்கு மற்றும் நேர்மறையான அணுகுமுறைகளை மேம்படுத்த படையினரை ஊக்குவிப்பதன் மூலம் சமூக, மனப்பான்மை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் போன்ற திட்டத்தின் முக்கிய நோக்கங்களை அடைவதில் இந்த முயற்சி கவனம் செலுத்தியது.

படையினர் கழிவு மற்றும் கழிவு நீர் முகாமை, கழிவு அமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் நோய் தொற்றும் நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டன. இராணுவ கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்ட மற்றும் திறமையான பொது சேவையை வளர்ப்பதற்காக '5S' கருத்தின் கொள்கைகளை புகுத்துவதற்கும் வலியுறுத்தப்பட்டது.

இந்த முயற்சி விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொறுப்பு இலக்குகளுக்கான இராணுவத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக செயல்பட்டது.