அரசாங்கத்தின் தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, இலங்கை இராணுவ படையினர் தப்போவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் யானைகளுக்கு உணவளிக்கும் வலயத்தை அமைத்தனர்.
அழிந்து வரும் யானைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கான பரந்த தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 ஒக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ந்த திட்டம் தப்போவ நீர்த்தேக்கப் பிரதேசத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் காட்டு தாவரங்களை அகற்றுவதிலும் கவனம் செலுத்தியது. அவை யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதனால் அகற்றப்பட்டது.
படையினர் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள இந்த தாவரங்களை அகற்றினர்.
58 வது காலாட் படைப்பிரிவின் 1 வது இலங்கை சிங்க படையணி, 6 வது விஜயபாகு காலாட் படையணி, இலங்கை கவச வாகன படையணி பிரிகேட் மற்றும் இலங்கை பீரங்கி படையணி பிரிகேட் ஆகியவற்றின் படையினர் இந்த திட்டத்தில் பங்கேற்றன. இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ், சிவில் சேவைத் துறைகளும் தங்கள் உதவியை வழங்கின.