5th September 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 செப்டம்பர் 4 ஆம் திகதி 2 வது இலங்கை இராணுவ முன்னோடி படையணி மற்றும் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயம் படையணிகளின் நிர்வாக மற்றும் செயற்பாட்டுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. 2 வது இலங்கை இராணுவ முன்னோடி படையணியில் லெப்டினன் கேணல் ஆர்.டபிள்யூ.எல்.டி.எல்.ஏ பெரேரா பீஎஸ்சீ சீஆர் அவர்களால் சிரேஷ்ட அதிகாரி வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் தற்போதைய பணிகள் குறித்து தளபதிக்கு விளக்கமளித்தார். படையினருக்கு உரையாற்றிய தளபதி, போர் ஒழுக்கத்தின் முக்கியத்துவம், நெறிமுறையற்ற நடைமுறைகளைத் தடுப்பது மற்றும் விசுவாசம் மற்றும் தொழில்முறையுடன் இராணுவ மரபுகளைப் பேணுதல் ஆகியவற்றை எடுத்துரைத்தார். இந்த விஜயம் குழுப்படம் எடுத்தல் மற்றும் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை பதிவிட்டதுடன் நிறைவடைந்தது.
மாலையில், தளபதி 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.இ.ஜே.சி ஹேமசிங்க தளபதியை மரியாதையுடன் வரவேற்றதுடன், விளக்கமளித்தார் பின்னர், தளபதி படையினருக்கு உரையாற்றினார். செற்பாடுகளின் திறம்பட ஒருங்கிணைப்பு மற்றும் "தூய இலங்கை" திட்டத்துடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலியுறுத்தினார். பின்னர் வசதிகளை ஆய்வு செய்ததுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் இந்த விஜயம் நிறைவடைந்தது.