தியாகமவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய புதியவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நிறைவு

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய பஞதியவர்களான குத்துச்சண்டை போட்டி 2026 மே 04 முதல் 08 வரை தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் குத்துச்சண்டை உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் 20 விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 92 ஆண் மற்றும் 42 பெண் விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்றனர். இராணுவ ஆண்கள் அணி 5 எடைப் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களையும், 2 எடைப் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 10 எடைப் பிரிவுகளில் 5 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.

இராணுவ குத்துச்சண்டை அணியின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிளியூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ குத்துச்சண்டை அணி இந்த குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியது.