தித்வா பேரழிவைத் தொடர்ந்து இராணுவத்தினால் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகள்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை இராணுவம் விரிவான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது, சேதமடைந்த பல இடங்களுக்கு சென்று தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அன்றாட வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படுகின்றது.

இலங்கை இராணுவ பொறியியல் படையணி, நாடு முழுவதும் பல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கனரக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அனுப்பியுள்ளது. 2025 நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை, பொறியியல் படையணி படையினர் நிலச்சரிவுகளை அகற்றுதல், சேதமடைந்த வீதிகளை சீர்செய்தல் மற்றும் அனர்த்ததில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதில் முக்கிய ஆதரவை வழங்குகின்றனர்.

221 வது காலாட் பிரிகேட்டின் 20வது கஜபா படையணி படையினர் குச்சுவெளி பிரதேச செயலகத்துடன் இணைந்து, திருகோணமலை-புல்மோட்டை B424 வீதியின் 49 கிமீ மற்றும் 51 கிமீ தூண்களுக்கு இடையில் சேதமடைந்த பகுதியை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உதவினர். 2025 டிசம்பர் 05, அன்று இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் 2025 டிசம்பர் 04 ஆம் திகதி யத்தல்கொட புகையிரத பாதையில் குவிந்திருந்த மண்ணை அகற்றும் பணியை மேற்கொண்டு, புகையிரத போக்குவரத்தை மீட்டெடுத்தனர்.

திருகோணமலை முதல் புல்மோட்டை வரையிலான B 424 வீதியின் சேதமடைந்த பகுதியை புனரமைக்க கிழக்கு பாதுகாப்புப் படையினர் உதவி வழங்கினர்.

எட்டியந்தோட்டை மற்றும் மீனகலையில் சேதமடைந்த வீதிகளை மேற்கு பாதுகாப்புப் படையினர் புனரமைத்தனர்.

கலா ஓயா புகையிரத பாலத்தின் தெற்குப் பகுதி புனரமைக்கப்பட்டது. (கலா ஓயா புகையிரத பாலத்திலிருந்து கல்கமுவ வரை)

பொதுமக்களின் வேண்டுகோளிற்கு இணங்க 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் பெரியபுளியங்குளம் குளக்கட்டை சீர்செய்தனர்.

11 வது காலாட் படைப்பிரிவின் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர், அபகஸ்தோவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும், சில்மியாபுர நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கும் 2025 டிசம்பர் 06 ஆம் திகதி அவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டனர்.

புஜ்ஜோமுவ மற்றும் யத்தல்கொட நிலையங்களுக்கு இடையில், 58 கி.மீ தூணிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள யத்தல்கொட பகுதியில், பொல்கஹவெல-அம்பேபுஸ்ஸ ரயில் பாதையின் ஒரு பகுதி நிலச்சரிவால் சேதமடைந்தது. 1வது இலங்கை சிங்க படையணியின் அயராத மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளால், ரயில் பாதை உறுதியாகப் சீரமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், 9 இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் மற்றொரு குழுவினால், மண் சரிவு காரணமாக சேதமடைந்த ரயில் பாதையின் புஜ்ஜோமுவ சுரங்கப்பாதை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த இடம் அலவ்வ மற்றும் புஜ்ஜோமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் 61 கி.மீ தூணிலிருந்து 270 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதுடன் இப் பணிகள் 2025 டிசம்பர் 06 அன்று மேற்கொள்ளப்பட்டது.

21 வது காலாட் படைப்பிரிவின் 5 வது (தொ) கஜபா படையணியின் படையினர், பொதுமக்களின் உதவியுடன், சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த கெபிதிகொல்லேவ - எல்லேவெவ குளக்கட்டை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினர் 2025 டிசம்பர் 06 அன்று பலுகஸ்வெவ,மஹாமன்கடவல குளத்தின் கட்டுமானப் பணிகளுக்கு உதவினர்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் சீரற்ற வானிலையால் கடுமையாக சேதமடைந்த கொழும்பு-மட்டக்களப்பு புகையிரத பாதையின், மனம்பிட்டி பிரதேசத்தில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலபொலவில் உள்ள மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதியை மீட்டெடுக்கும் பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தால், 22 வது காலாட் படைப்பிரிவின் படையினரின் உதவியுடன் தொடங்கப்பட்டன. மறுசீரமைப்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

வன்னி பாதுகாப்புப் படையின் கீழ் உள்ள படையினர் பூ ஓயாவில் உடைந்த புகையிர பாதை, மஹாலிந்தவெவ குளக்கட்டு, நீர் பெருக்கெடுத்ததால் சேதமடைந்த புகையிரத பாதைகள், குருவில் பகுதியிலுள்ள யோதவெவ அணைக்கட்டின் சேதமடைந்த பாதை மற்றும் கல்குளம் குளக்கட்டு போன்ற இடங்களில் தேசத்தைக் சீர்செய்யும் நடவடிக்கைகளிலும் புனரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டனர்.

பண்டைய எலஹெர அணைக்கட்டு பகுதியில் திட்டத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபையுடன் இணைந்து, அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் வகையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக இராணுவப் படையினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

21 வது காலாட் படைப்பிரிவின் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, 2025 டிசம்பர் 09 அன்று நீர்மட்டம் பெருக்கெடுத்ததால் இடிந்த சியம்பலகஸ்வெவ குளத்தின் அணைக்கட்டை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினர் பலுகஸ்வெவவில் இடிந்து விழுந்த மஹா மங்கடவல குளக்கட்டை சீரமைத்துடன் 7 வது இலங்கை சிங்க படையணி படையினரால் நொச்சியாமோட்டையில் 60% ரயில் பாதைகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. மேலும் 8 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் நீர் மட்டம் உயர்ந்த்தால் சேதமடைந்த வண்ணாங்குளம் குளக்கட்டு சீரமைக்கப்பட்டது.

11 வது காலாட் படைப்பிரிவின் 1 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் கந்தேஎல பகுதியில் சேதமடைந்த கால்வாய்களை சீர்செய்வதில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உதவி வழங்கினர். வெல்கெட்டிய அமுனா கிராமத்தில் உள்ள போதவ அணைக்கட்டைச் சீர்செய்வதில் 2 வது இலங்கை ரைபிள் படையணி படையினர் உதவி வழங்கினர்.

மேலும், 23வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் மாத்தட்டில்லாவில் சேதமடைந்த கால்வாய்களை சீர்செய்வதில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உதவி வழங்கினர். மேலும், 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் நாவுல லேனதோரவிலிருந்து வெலிகடயாய வரையிலான வீதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டதுடன், கவடியாமுனை கால்வாய் பாதையை சுத்தம் செய்து மணல் மூட்டைகளை வைத்து மீட்டெடுத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கோரிக்கையின் பேரில், சேதமடைந்த நாயாறு பாலத்தை புனரமைக்க 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர் உதவி வழங்கினர். அதற்கமைய 11 வது இலங்கை பீரங்கிப் படையணி படையினர் தலைமன்னார் மருத்துவமனையின் பாதுகாப்பற்ற கட்டிடத்தை அகற்றும் பணிகளை இரண்டாவது நாளாக தொடர்ந்தனர். அத்துடன், 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 டிசம்பர் 10 அன்று முத்துஐயன்கட்டு குளத்தின் கரையைப் பாதுகாக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

2025 டிசம்பர் 10 அன்று இலங்கை இராணுவப் படையினர் பல இடங்களில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளுக்கு உதவினர். 21 வது காலாட் படைப்பிரிவின் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் சியபலகஸ்வெவவில் உடைந்த குளக்கட்டு சீரமைக்கப்பட்டது. 7 வது சிங்க படையணி படையினர் தாண்டிக்குளம் மற்றும் நொச்சிமோட்டை இடையே சேதமடைந்த ரயில் பாதையை சரி செய்தனர். மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேண்டுகோளிற்கமைய, குருவில் யோதவெவ அணைக்கட்டின் சேதமடைந்த வான்கதவுகளை 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் மணல் மூட்டைகளை பயன்படுத்தி சீரமைத்தனர்.

சேதமடைந்த ஊவா பரணகம பாலத்தை 23 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 டிசம்பர் 10 அன்று சீர் செய்தனர்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் படையினரால் சேதமடைந்த பூ ஓய பாதை சீரமைத்தல் மற்றும் 2 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் தாண்டிக்குளம்-நொச்சிமோட்டை ரயில் பாதையை சரிசெய்தல் உள்ளிட்ட முக்கிய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததுடன் தற்போது 80% புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.மேலும் 17 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணி படையினர் பொதுமக்களுடன் இணைந்து சேதமடைந்த செக்கட்டிபிலவெவ மற்றும் பெருகன்குளம் குளக் கரைகளை சீரமைத்தனர்.

55 வது காலாட் படைப்பிரிவு, 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 11 வது (தொ) கஜபா படையணி, 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 9 வது இலங்கை பொறியியல் படையணி படையினர் 2025 டிசம்பர் 09 அன்று இந்திய இராணுவ பிரதிநிதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்களுடன் இணைந்து, அக்கராயன்குளம் பிரதேச மருத்துவமனையின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்து, சேதமடைந்த A-35 கண்டாவளை பாலத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கு ஆதரவளித்தனர்.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட குடும்பிமலை-முருதான பாதையை கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சுத்தம் செய்துடன் அதே நேரத்தில் 20 வது கஜபா படையணி படையினர் திருகோணமலை-புல்மோடை B424 பாதையை சீரமைத்துடன், எலஹெரா அணைக்கட்டிலுள்ள கட்டுமானப் பணிகளுக்கு பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கினர்.

சமிக்ஞை படையணி பாடசாலை படையினர் கண்டி மாவட்டத்தில் பைபர் தொடர்பை ஏற்படுத்துவதற்காக SLT கண்டி நிறுவனத்திற்கு 2025 டிசம்பர் 12 அன்று உதவினர்.

1 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 டிசம்பர் 12 அன்று கந்தே எலவுக்கு சென்றனர்.

மேலும் சமீபத்திய சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த A-35 பாதையில் உள்ள கண்டாவளை பாலத்தின் மறுசீரமைப்பு பணிகள் 2025 டிசம்பர் 12 அன்று மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிக்காக, 6 வது இலங்கை சிங்க படையணி, 9 வது இலங்கை பொறியியல் படையணி மற்றும் இலங்கை பொறியியல் சேவைகள் படையணி படையினர் வீதி அதிகார சபை பணியாளர்களுடன் இணைந்து, இந்திய இராணுவ பிரதிநிதிகள் மற்றும் பொறியியளார்களுக்கு உதவினர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 5வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர், மஹாலிதவெவ குளத்தின் சேதமடைந்த குளக்கட்டை புனரமைப்பதில் உதவி வழங்கினர். இதற்கிடையில்,8வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 டிசம்பர் 14 அன்று கல்நாட்டி குளக்கட்டை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் ராஜாங்கனைய சுவடு 9 பாதையின் புனரமைப்பு பணிகளுக்கு உதவினர். மேலும், கிராமவாசிகளின் வேண்டுகளுக்கு இணங்க, 12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 டிசம்பர் 14 அன்று வன்னி பாதுகாப்பு படை தலைமையக பகுதியில் உள்ள சின்னக்குளம் குளக்கரையை சீரமைத்தனர்.

2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர், மஹாகந்தராவ கல்பாலவில் உள்ள வெலிஓயா சந்தியிலிருந்து மிஹிந்தலையை இணைக்கும் சேதமடைந்த கான்கிரீட் பாலத்தை 2025 டிசம்பர் 15 அன்று சீரமைத்தனர்.

மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர் 2025 டிசம்பர் 15 அன்று இரத்தோட்டையில் மின்சார விநியோகத்தை சீரமைப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு உதவினர்.

18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து கல்லல்ல மற்றும் மனம்பிட்டிய இடையேயான ரயில் பாதையை 2025 டிசம்பர் 15 அன்று புனரமைத்தனர்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இயங்கும் 8 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 டிசம்பர் 16 அன்று முருங்கனில் உள்ள 279 கிமீ மைல் மற்றும் 280 கிமீ இடையிலான ரயில் பாதையை மீட்டெடுத்தனர்.

அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு- கொஹொம்பகஸ் சந்தி பாதையில் அமைந்துள்ள நாயாறு பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2025 டிசம்பர் 16 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தன.

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 1 வது இலங்கை ரயிபல் படையணி படையினர் 2025 டிசம்பர் 16 அன்று மாத்தளை, திக்கும்புரவில் மின்சார விநியோகத்தை மீட்டெடுத்தனர்.

தித்வா சூறாவளிக்குப் பின்னர், இலங்கை பொறியியல் படையணி படையினர் நிலச்சரிவுகளை அகற்றி, தொடர்புகளை மீட்டெடுக்கவும், முக்கிய பாதைகளை மீண்டும் இணைக்கவும், தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களை மீண்டும் இணைக்கவும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுக்கவும் முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் உதவி செய்தனர்.

கம்பளை–நுவரெலியா, கம்பளை–நாவலப்பிட்டி, கண்டி–மஹியங்கனை, பசறை–பதுளை, கண்டி–கலகெதர மற்றும் அனுராதபுரம்–வவுனியா உள்ளிட்ட முக்கிய பாதைகள் மீட்டெடுக்கப்பட்டதுடன், இதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கும் நிவாரண பரிமாற்றதுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பெரிதும் சேதமடைந்த ஹுன்னஸ்கிரிய–மீமுரே பாதைக்கான தொடர்பு மீண்டும் திறக்கப்பட்டதுடன் இதனால் மீள்கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும், முல்லைத்தீவு- கோகிலாய் வீதி உள்ள நாயாறு மற்றும் ஹட்டனில் உள்ள காசில்ரீ ஆகிய இடங்களில் உள்ள பாலங்கள் புனரமைக்கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், எலஹெர அணைக்கட்டை புனரமைத்தல், மகாவலி ஆற்று அணையை வலுப்படுத்துதல், ரயில் பாதைகளை சீரமைத்தல் மற்றும் இரத்தோட்டையில் உள்ள பிரதான நீர் வழங்கல் பாதையை சரிசெய்தல் ஆகியவற்றுடன் படையினர் பொது சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீட்பதில் ஆதரவு வழங்கினர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14-ஆவது இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர், மஹோத்தபஹுவ பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பொதுமக்களின் தீவிர ஆதரவுடன், மஹோத்தபஹுவ குளத்தின் அணைக்கட்டினை ஐந்து நாட்கள் நீடித்த நாட்களில் புனரமைத்து, 2025 டிசம்பர் 16 அன்று பணிகளை நிறைவு செய்தனர். மேலும், 2025 டிசம்பர் 17 அன்று, 9 வது கஜபா படையணியின் படையினர், கித்த குளத்தின் கால்வாய் அணைக்கட்டினை ஆரம்ப கட்டத்திலேயே, கிட்டத்தட்ட 300 பொலிசாக் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி வலுப்படுத்தி, வெற்றிகரமாக அணைத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கோரிக்கையின் பேரில், விசேட அனர்த்த நடவடிக்கை நிலையத்தின் தலைவராக செயல்படும் இராணுவத் தளபதி அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளர் பிரிகேடியர் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூவீ ஆர்எஸ்பீ. என்டிசீ ஆகியோருடன் இணைந்து, தித்வா சூறாவளி காரணமாக கடுமையாக சேதமடைந்து நீரில் மூழ்கிய நயாறு–கோகிலாய் வீதியில் இரண்டு கச்சிதமான 200 பாலங்களைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இலங்கை பொறியியல் படையினர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெருக்கமான ஒருங்கிணைப்புடனும், 59 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள 591 வது காலாட் பிரிகேட் படையினரின் உதவியுடன், உடனடியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். சேதமடைந்த உட் கட்டமைப்பை மீட்டெடுக்க சவாலான சூழ்நிலைகளில் படையினர் 24 மணி நேரமும் அயராது உதவி வழங்கினர்.

2025 டிசம்பர் 02 முதல் 16 வரை படையினர் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்பு முயற்சிகளின் விளைவாக, 50 அடிக்கு முன்னர் இருந்த முதல் சேதமடைந்த பாலம், 2025 டிசம்பர் 16, அன்று 120 அடி நீளமுள்ள பாலமாக வெற்றிகரமாக சீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஎஸ். மில்லகல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ, கள பொறியியல் படையணியின் தளபதி பிரிகேடியர் எச்கேபீ. கருணாதிலக ஆர்எஸ்பீ மற்றும் 591 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்எஸ்ஐ அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 டிசம்பர் 11, அன்று, பாதிக்கப்பட்ட பகுதியை வலுப்படுத்தவும் மேலும் அரிப்பைத் தடுக்கவும் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி ஒரு பாதுகாப்பு அணையை அமைத்து, முத்துஐயன்கட்டு குளத்தின் சேதமடைந்த அணைக்கட்டை உறுதிப்படுத்தினர்.

8 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் 279 கிமீ மற்றும் 280 கிமீ தூண்களுக்கு இடையிலான புகையிரத பாதையை புனரமைத்தனர். அதே நேரத்தில் 8 வது விஜயபாகு காலாட் படையணியின் ஒரு குழு வேப்பம்குளத்தில் உள்ள நெலுக்குளம குளக்கட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது.

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த ஏ-35 வீதியின் கண்டாவளை பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 9வது இலங்கை பொறியியல் படையணி படையினர் மற்றும் 120 இந்திய இராணுவ வீரர்கள் கொண்ட குழுவுடன் 2025 டிசம்பர் 18 அன்று மேற்கொண்டனர். 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் உட்பட 6 வது இலங்கை சிங்க படையணி, பொறியியல் சேவைகள் படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி ஆகியவற்றின் படையினர் பணிகளுக்கு தமது உதவியை வழங்கினர்.

21 வது காலாட் படைப்பிரிவின் கீழ் இயங்கும் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர், செட்டிகுளம் பகுதியில் உள்ள செட்டிகுளம் மற்றும் முஹந்தன்குளம் இடையே 251 கி.மீ முதல் 250 கி.மீ மைல்கல் வரையிலான ரயில் பாதையில் இடிபாடுகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 279 கி.மீ - 280 கி.மீ மைல்கல் வரையிலான ரயில் பாதையை புனரமைப்பதில் உதவுவதற்காக, 54 வது காலாட் படைப்பிரிவின் 8 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2025 டிசம்பர் 23 அன்று பணியமர்த்தப்பட்டனர். இந்த முயற்சிகள் சாதாரண புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளை மீட்டெடுப்பதையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் புகையிரத போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், 59 வது காலாட் படைப்பிரிவின் படையினர் சேதமடைந்த நாயாறு பாலத்தை புனரமைப்பதில் உதவி செய்து வருகின்றன. பாலத்தின் புதுப்பித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.