5th May 2026
திருகோணமலை இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க, 223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.டி.ஐ. குணவர்தன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேட் படையினர் 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி முதூர் கலாசார மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இத்திட்டம் திருகோணமலை இரத்த வங்கியின் மருத்துவ பணியாளர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், 20 வது கஜபா படையணியின் படையினர், பதவிய தொகுதி இரத்த வங்கியின் மருத்துவக் குழுவுடன் இணைந்து, புல்மொடை முகாம் வளாகத்தில் அதே நாளில் மற்றொரு இரத்த தான முகாமை நடாத்தினர்.
இந்த திட்டத்தில் இராணுவம், கடற்படை, பொலிஸார் மற்றும் அப்பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டனர்.