திம்புலாகல விகாரையில் இராணுவத்தினரால் துப்புரவு பணிகள்

'தூய இலங்கை' திட்டத்தின் ஒரு பகுதியாக, 231 வது காலாட் பிரிகேட் படையினர் பொது மக்களுடன் இணைந்து 2025 நவம்பர் 04 அன்று திம்புலாகல விகாரையின் அஹஸ் மாலிகா சாலையின் இருபுறமும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்தத் திட்டம் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு 23வது காலாட் படைப்பிரிவு மற்றும் 231 வது காலாட் பிரிகேட்டின் மேற்பார்வையின் கீழ், 12 வது கெமுனு ஹேவா படையினரின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.