6th March 2026
கொழும்பு மகளிர் அமைப்பு, சுபமீ ஊடகங்கத்துடன் இணைந்து, பதவியேற்ற வண. திம்புலாகல ராகுலலங்கார நாயக்க தேரரின் 59 வது பிறந்தநாளை முன்னிட்டு 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனயத்தில் ‘ஜன சுவ யாத்திரை’ என்ற தலைப்பில் ஒரு சமூக நலத் திட்டம் நடாத்தப்பட்டது.
வண. தேரரின் அழைப்பின் பேரில், இந்நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திம்புலாகல பிரதேசத்தில் வசிப்பவர்களின் நலனுக்காக ஒரு மருத்துவ முகாம் மற்றும் பல சமூக நல திட்டங்கள் இடம்பெற்றன. இத்திட்டத்தில், வைத்திய சிகிச்சை நிலையத்தில் கண் வைத்தியர்கள் மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உட்பட இலங்கை வைத்திய நிபுணர்கள் குழுவினரால் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பங்கேட்பாளர்கள் அத்தியாவசிய சுகாதார சேவைகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், திருமதி சுரேகா கார்டினர் மற்றும் கொழும்பு மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள், சாதாரண அறங்காவலர் குழுவின் (தயக சபை) உறுப்பினர்கள், அரச சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.