தேசிய கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ வீரர் சாதனை

2026 ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுப் போட்டிகளின் போது, 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் அவர்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

2026 மே 16 அன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் 5.20 மீட்டர் உயரத்தைத் தாண்டி, முந்தைய தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

(புகைப்படம் : ceylonathletics.com)