30th August 2025
நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு, தேசிய குண்டு செயலிழப்பு திட்டத்தின் திருத்திய இலங்கை குண்டு செயலிழப்பு நிறைவு மூலோபாயத்தை (2025-2027) 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அறிமுகப்படுத்தியது.
நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ திரு. அனுரா கருணாதிலக்க அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இலங்கை இராணுவத்தின் பிரதம கள பொறியியலாளரும் கள பொறியியல் படையணியின் படைத் தளபதியும் மற்றும் கள பொறியியல் பிரிகேட் தளபதி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அரச சாரா நிறுவனங்களால் நடாத்தப்பட்ட கண்காட்சியுடன் இணைந்து, இலங்கைப் பொறியியல் படையணியின் கே9 பிரிவால் கண்ணிவெடி கண்டறிதல் நாய் நிகழ்ச்சி மற்றும் தகவல் பரிமாற்ற நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதில் உயர் பயிற்சி பெற்ற கண்ணி வெடிகளைக் கண்டறியும் நாய் தங்கள் முக்கிய பங்கை வெளிப்படுத்தினர்.
கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களைக் கண்டறிவதில் இந்த சிறப்பு நாய்களின் செயல்திறன், துல்லியம் மற்றும் ஒழுக்கத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிகழ்வில் உலகலாவிய ரீதியில் பங்கேற்ற கண்ணிவெடி அகற்றும் அதிகாரிகளுடனான மதிய உணவு மற்றும் கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.