'தைப் பொங்கல்' உங்களுக்கு அனைத்து செல்வத்தையும், நல் ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டுவரட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் இணைந்து, தாய் நாடான இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் இந்த இந்து நம்பிக்கையின் புனிதமான மற்றும் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் - மிகவும் மகிழ்ச்சியான 'தைப் பொங்கல்' பண்டிகையை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.

இராணுவத் தளபதியின் செய்தி இங்கே:

இந்த மங்களகரமான நாளை முன்னிட்டு, இலங்கை இந்து சமூகத்திற்கும், தைப்பொங்கலைக் கொண்டாடும் இலங்கை இராணுவத்தின் அனைத்துப் படையினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரியன், இயற்கை அன்னை மற்றும் அதன் அபரிமிதமான அறுவடைகளுக்கு வழிப்பாடு செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, இந்துக்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் நாம் பாதுகாக்க வேண்டிய வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் ஒரு உணர்ச்சிகரமான நினைவூட்டலாகும். தைப் பொங்கலின் வளமான மரபுகளை நாம் மதிக்கும் வேளையில், நம்மைச் சுற்றியுள்ள ஆசீர்வாதங்களைப் பாராட்டவும், இயற்கையின் தாராள மனப்பான்மைக்கும், நம் வாழ்க்கையை வளப்படுத்தும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நொடி ஒதுக்குவோம்.