14th September 2025
இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலையில் 2025 செப்டெம்பர் 08 முதல் 11 வரை ரோயல் ஆஸ்திரேலிய பொறியியல் நிறுவனம் எப்3 கண்ணிவெடி கண்டுபிடிப்பு பட்டறையை நடாத்தியது.
நிறைவு விழாவில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜான்ஸ்டன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வருகை தந்த பிரதம விருந்தினரை இலங்கை இராணுவ பொறியியல் பாடசாலையின் தளபதி கேணல் ஜே.ஏ.சீ.எஸ். ஜாகொட பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
தனது உரையில், இராணுவ பொறியியலில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பு, செயற்பாட்டு சிறப்பம்சம் மற்றும் மனிதாபிமான பொறுப்பு ஆகியவற்றின் பகிரப்பட்ட நோக்கங்களை எடுத்துக்காட்டினார். பட்டறையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.