ரணவிரு செவன - ராகமவில் படைவீரர்களின் நலன் குறித்து ஜனாதிபதி விசாரித்தார்.

அதிமேதகு ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2026 மே 19 ஆம் திகதி ரணவிரு செவன புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன், அங்கு சிகிச்சை பெற்றுவரும் பணியாளர்களின் நலம் குறித்து விசாரித்தார்.

இந்தப் விஜயத்தின் போது, ஜனாதிபதி வீரர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு, தாய்நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் அவர்கள் ஆற்றிய தியாகங்களையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள், நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுடன் கலந்துரையாடியதுடன், சிகிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களுக்குக் கிடைக்கக்கூடிய மருத்துவ மற்றும் நல்வாழ்வு வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் ஆராய்ந்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் செனரத் கொஹோன (ஓய்வு) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

(புகைப்பட அனுசரனை: www.presidentsoffice.gov.lk)