புத்தாண்டை முன்னிட்டு அங்கவீனமுற்ற போர்வீரர்களை இராணுவ தளபதி சந்திப்பு

வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி ராகம ரணவிரு செவன இராணுவப் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டு, ராகம ரணவிரு செவன இராணுவப் புனர்வாழ்வு நிலைய தளபதி பிரிகேடியர் ஜீ.ஆர்.எஸ். தர்மரத்ன யூஎஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இந்தப் விஜயத்தின் போது, இராணுவத் தளபதி வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், தங்கியிருக்கும் போர் வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் நலம் விசாரித்தார். மேலும், அவர் மாற்றுத்திறனாளி முன்னாள் போர் வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அவர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன் குழுப் படம் எடுத்துக் கொண்டார்.

இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சீ, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோருடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலுள்ளவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.