1st September 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 செப்டம்பர் 01, அன்று மேஜர் ஜெனரல் ஆர்பீஎஸ் பிரசாத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு மேஜர் ஜெனரல் நிலைக்கான அதிகார சின்னத்தினை வழங்கினார். நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்த புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவத் தளபதி மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அன்பான உரையாடலுக்குப் பின், இராணுவத் தளபதி, மேஜர் ஜெனரல் நிலைக்கு தகுதிபெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது புதிய நிலையைச் குறிக்கும் வகையில் அதிகார ஜெனரல் வாளை வழங்கினார்.