பண்டாரவளை, பூனாகலவில் ஏற்பட்ட மண்சரிவால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு, உதவுவதற்கு இலங்கை இராணுவம் தனது ஆதரவை வழங்கி வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். சமூக வலுவூட்டல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை வலியுறுத்தும் நிமித்தம் தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, இந்த முயற்சி தேசிய வளர்ச்சி நோக்கங்களின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம் கட்டுமானப் பணிகள், இராணுவத்தின் பொறியியல் சேவைகள் படையணியின் படையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, 40 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இக் கட்டுமானம் 2025 நவம்பர் மாத இறுதியில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.