20th November 2025
படையணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி 2025 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி 2025 நவம்பர் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக வளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
கூடைப்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை இராணுவ சேவைப் படையணி பெற்றுக் கொண்டதுடன், இலங்கை இராணுவ பொது சேவை படையணி மற்றும் இராணுவ பொலிஸ் படையணி ஆகியவை முறையே இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
போட்டியின் சிறந்த வீரருக்கான விருது 2 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியுன் சிப்பாய் ஜே.சி.எம். கமகே அவர்களுக்கு வழங்கப்பட்டது.