27th August 2025
இலங்கை இராணுவ பளுதூக்கும் வீரர் சாஜன் வைடிஐ குமார அவர்கள் 2025 ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சாம்பியன்ஷிப்பில் கனிஷ்ட இளைஞர் மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் கடுமையான போட்டி இடம்பெற்றது. சிரேஷ்ட ஆண்களுக்கான 60 கிலோ போட்டியில், சாஜன் வைடிஐ குமார விதிவிலக்கான வலிமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தி ஸ்னாட்ச் பிரிவில் 111 கிலோ மற்றும் கிளீன் மற்றும் ஜெர்க்கில் 138 கிலோ எடையைத் தூக்கி, மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.