போர் நீச்சல் பாடநெறி இல.12ன் பட்டமளிப்பு விழா

போர் நீச்சல் பாடநெறி இலக்கம் -12ன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, 2025 செப்டம்பர் 06 அன்று நாயாறு விஷேட படையணி போர் நீச்சல் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது. போர் கருவி பணிப்பாளர் நாயகமும் விஷேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.டீ.ஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கொமாண்டோ படையணி, விஷேட படையணி மற்றும் விமானப்படை விஷேட படையணிகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், அவர்களின் உடல் சகிப்புத்தன்மை, தந்திரோபாயத் திறன்கள் மற்றும் நீச்சல் திறமையை சோதித்த கடினமான பாடத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.