பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீ 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் அணைப்பு

பலாங்கொடை கோங்கஹவெல பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் உடனடியாகக் அணைக்கப்பட்டு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுபாட்டுக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டனர்.

படையினரின் இந்த தீவிர நடவடிக்கையால் வனப்பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டது.