23rd September 2025
பலாலி இராணுவத் தள மருத்துவமனை, யாழ். போதனா மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 20 அன்று இரத்த தான நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்வின் போது மொத்தம் 10 அதிகாரிகள் மற்றும் 84 சிப்பாய்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்வு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.