28th August 2025
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 25 ஆம் திகதி இராணுவ போர் கருவி தொழிற்சாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ போர் கருவி தொழிற்சாலையின் தளபதியனால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் வகையில் இராணுவ போர் கருவி தொழிற்சாலை வளாகத்தில் சம்பிரதாயபூர்வமாக ஒரு மரக்கன்றை நாட்டினார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டார்.
அன்றைய நிகழ்ச்சியில், தொழிற்சாலையின் தொழில்நுட்ப திறன்கள், தற்போதைய வளர்ச்சியின் முயற்சிகள் மற்றும் இராணுவத்தின் செயற்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் விரிவான விளக்கத்தை இராணுவ போர் கருவி தொழிற்சாலையின் தளபதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, உற்பத்தி வசதிகளை ஆய்வு செய்ததுடன், இராணுவ போர் கருவி தொழிற்சாலையின் தன்னம்பிக்கை மற்றும் புதுமைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் உற்பத்தி செயல்முறைகள், தரத் தரநிலைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களை நேரில் பார்வையிட்டார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி தனது விஜயத்தின் நிறைவாக இராணுவ போர் கருவி தொழிற்சாலையின் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். தனது உரையில் வளர்ந்து வரும் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் தொடர்ச்சியான பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இலங்கை இராணுவத்தின் செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்துவதில் இராணுவ போர் கருவி தொழிற்சாலையின் பணியாளர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அவர் பாராட்டினார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி தனது விஜயத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் இராணுவ போர் கருவி தொழிற்சாலையின் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது கருத்துகளையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார்.