11th August 2025
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கை இராணுவ மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் தொழிற்சாலையின் தளபதி, தொழிற்சாலையால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், தற்போதைய திட்டங்கள், மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள், சிறு ஆயுதப் பிரிவு மற்றும் வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். தொழிற்சாலை வளாகம், சிறு ஆயுதப் பிரிவு மற்றும் புனரமைக்கப்பட்ட புதிய வாகன பட்டறை ஆகியவற்றையும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி பார்வையிட்டார்.
இந்த விஜயத்தில் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.