2nd July 2025
மறைந்த பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 ஜூலை 01, அன்று பொரளை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இராணுவ வீரர்கள், பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தேசத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தனர்.
இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர், தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பூதவுடலை தாங்கிய பேழையின் பின்னால் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை வழங்கினர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், இராணுவத்தினர்,குடும்ப உறுப்பினர்களுடன் பேழையினை பின்னால் அணிவகுத்து சென்றனர்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி அவர்களினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I மறைந்த பிரிகேடியரின் சேவையையும் அவரது சேவைக்கான நாட்டின் நன்றியையும் பிரதிபலிக்கும் வகையில் கூடியிருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த அதிகாரிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இராணுவ மரியாதையான அடையாள துப்பாக்கி மரியாதை செலுத்தப்பட்டது.
இறுதி வாசிப்பின் சில நிமிடங்களுக்குப் பிறகு, புகழ்மிகு வீரர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கமான மரியாதை நிமித்தமாக இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மறைந்த பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ தனது சிறந்த இராணுவ வாழ்க்கையில் பெற்றுக் கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட கட்டளை பகுதி 1 பின்வருமாறு: