பினர பௌர்ணமி தின மத அனுஷ்டானங்களில் இராணுவத் தளபதி பங்கேற்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2025 செப்டம்பர் 07 ஆம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் பினர பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த மத நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி ஆயுதப் படைகளுக்கு ஆசிர்வாதம் செலுத்துவதையும், தேசத்திற்காக உயர்ந்த தியாகத்தைச் செய்த வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி அன்னதானத்தில் பங்கேற்றதுடன், மகா சங்கத்தினரால் நடாத்தப்பட்ட தர்ம பிரசங்கங்களிலும் இணைந்து கொண்டார்.

இந்த மத அனுஷ்டானங்களில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.