2nd August 2025
வெலிசர தளபதி பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக அரங்கில் 2025 ஜூலை 21 முதல் 24 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் கூடைப்பந்து இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் கூடைப்பந்து அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப்பை வென்றது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இராணுவ அணி இலங்கை விமானப்படை ஆண்கள் கூடைப்பந்து அணியை 79–65 என்ற கணக்கில் தோற்கடித்தது. 1 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிப்பாய் பீ.எஸ்.எம். கமகே போட்டியின் சிறந்த வீரராகவும், 6வது கஜபா படையணியின் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் கே.டபிள்யூ.ஏ. கமதேவத்த சிறந்த தடுப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.