7th August 2025
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 13வது பாதுகாப்பு சேவைகள் கராத்தே போட்டி 2025 ஓகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பனாகொடை இராணுவ உடற்கல்வி பயிற்சி பாடசாலை உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இராணுவ கராத்தே விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்டி சாலே இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்தப் போட்டியின் போது, இராணுவ விளையாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆண்கள் பிரிவில் 06 தங்கப் பதக்கங்கள், 08 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஆண்கள் எடை பிரிவு 07 இல் 06 ஐ வென்று மொத்தம் 58 புள்ளிகளைப் பெற்று, இராணுவம் நான்காவது தடவையாகவும் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.
பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்கள் விவரம் பின்வருமாறு:
• குமிட் (50 கிலோவிற்கு கீழ்): லான்ஸ் கோப்ரல் பிரியதர்ஷன - 19வது இலங்கை பாதுகாவலர் படையணி
• குமிட் (50 கிலோவிற்கு கீழ்): பணிநிலை சாஜன் பண்டார - 19வது இலங்கை பாதுகாவலர் படையணி
• குமிட் (60 கிலோவிற்கு கீழ்): கோப்ரல் டயஸ் - 8வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி
• குமிட் (67 கிலோவிற்கு கீழ்): லான்ஸ் கோப்ரல் சில்வா - 1வது இலங்கை பொறியியல் படையணி
• குமிட் (48 கிலோவிற்கு கீழ்): சாஜன் கருணாரத்ன - 2வது (தொ) பொது சேவை படையணி
• குமிட் (50 கிலோவிற்கு கீழ்): பணிநிலை சாஜன் வீரசிங்க - 1வது இராணுவ பொலிஸ் படையணி
இந்நிகழ்வில் முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.