29th December 2025
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மதுபரா சிங்கள மகா வித்தியாலயம், கட்டியடப்பன ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம், தம்பனேகுளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் ஆரம்ப பாடசாலை மற்றும் பன்னிவெட்டுவான் ரோமன் கத்தோலிக்க தமிழ் ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 115 மாணவர்களுக்கு 2025 டிசம்பர் 22, அன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், 25 ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த திட்டத்திற்கு காலி, அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரியின் 2006 ஆம் ஆண்டு உயர்தர சிறப்பு பெறுபேறு பெற்றவர்கள் நிதியுதவி செய்தனர்.