22nd July 2025
பாகிஸ்தான் இராணுவத்தின் பொது பணிநிலை பிரதானி லெப்டினன் ஜெனரல் சையத் ஆமர் ராசா அவர்கள் உயர்மட்ட இராணுவக் குழுவுடன் 2025 ஜூலை 22 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த அவரை, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். மேலும், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இராணுவ மரியாதைகளைத் தொடர்ந்து, பொது பணிநிலை பிரதானியை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அன்புடன் வரவேற்றார். தளபதி, வருகை தந்த பிரமுகருக்கு முதன்மைப் பணிநிலை அதிகாரிகளை அறிமுகப்படுத்தி, குழுப்படம் எடுப்பதற்காக அழைத்தார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இரு படைகளுக்கும் இடையிலான நல்லெண்ணத்தையும் பரஸ்பர மரியாதையையும் குறிக்கும் வகையில், இரு சிரேஷ்ட அதிகாரிகளுக்குமிடையில் நினைவுப் பரிசில்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் இந்த விஜயம் நிறைவடைந்தது. பாராட்டு தெரிவிக்கும் விதமாக, லெப்டினன் ஜெனரல் சையத் ஆமர் ராசா விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.