ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீ.எல்.எஸ்.டப்ளியூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 35ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 நவம்பர் 19 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் ஜீ.எல்.எஸ்.டப்ளியூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 1993 நவம்பர் 03 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி எண் - 08 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், 1992 நவம்பர் 14 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சமிக்ஞை படையணியில் நியமிக்கப்பட்டார்.

தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2024 ஜனவரி 08 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 நவம்பர் 26ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது அவர் இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியாக பணியாற்றுகின்றார்.

மேஜர் ஜெனரல் ஜீ.எல்.எஸ்.டப்ளியூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 1 வது இலங்கை சமிக்ஞை படையணியின் பயிற்றுவிப்பாளர் அதிகாரி, 3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் உள்ளக பாதுகாப்புக் குழுவின் குழு கட்டளையாளர், 5 வது இலங்கை சமிக்ஞை புலனாய்வு படையணியின் குழு கட்டளையாளர், 3 வது இலங்கை சமிக்ஞை படையணியின் படை கட்டளையாளர், 533 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, 55 வது காலாட் படைப்பிவு தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, பனாகொடை சமிக்ஞை தளப் பட்டறையின் அதிகாரி கட்டளை,வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் பிரிவில் அதிகாரி பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கல்வி பணிப்பாளர், பனாகொடை சமிக்ஞை தளப் பட்டறையின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் ஹைட்டியில் உள்ள U-1 ஐ.நா அமைதி காக்கும் படை குழுவின் இராணுவப் அதிகாரிகளின் பிரதி பிரதானியாகவும் அவர் கடமையாற்றினார். அவர் 2 வது (தொண்டர்) இலங்கை சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரகாவும் கடமையாற்றினார். இராணுவத் தலைமையகத்தில் உள்ள ஆராய்ச்சி, கருத்து மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு கணிப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தொழில்நுட்பம் அல்லாத பிரிவின் தலைவராகவும் கடமையாற்றினார். முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கேணல் (பொதுப்பணிநிலை)யாக கடமையாற்றினார். அவர் இராணுவ தலைமையகத்தில் உள்ள திட்ட பணிப்பகத்தின் கேணல் (திட்டம்) கடமையாற்றினார். அவர் 143 வது காலாட் பிரிகேட் தளபதியாக பணியாற்றினார். அவர் சமிக்ஞை பிரிகேட் தளபதியாக கடமையாற்றினார். அத்துடன் அவர் தகவல் தொழிநுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர், வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பக பணிப்பாளர், வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பக பணிப்பாளர் நாயகம், யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் வழங்கல் கட்டளை தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார், யவர் தற்போது இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியாகவும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியாகவும் கடமையாற்றுகின்றார்.

இலங்கை இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு உத்தம சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிரேஷ்ட அதிகாரி இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் பணிநிலை பாடநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

இந்தியாவில் இளம் அதிகாரிகள் பாடநெறி மற்றும் இந்தியாவில் சமிஞ்சை நிறுவன கட்டளையாளர் பாடநெறி உள்ளிட்ட பல வெளிநாட்டு பாடநெறிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் மின் பொறியியல் இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்) பட்டத்தையும் களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்கைகள் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் கடற்படை முதுகலைப் பாடசாலையில் பாதுகாப்பு கற்கைள் (சிவில் இராணுவ உறவுகள்) கலை முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.