26th June 2025
11 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 34 வருட சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2025 ஜூன் 25 ஆம் திகதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 1991 ஜனவரி 02 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1992 ஓகஸ்ட் 29 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பீரங்கி படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2024 ஜூன் 05 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி, 2025 ஜூன் 26 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது அவர் 11 வது காலாட் படைப் பிரிவின் தளபதியாவும் இலங்கை இராணுவ காற்பந்து குழுவின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.
மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். 7வது இலங்கை பீரங்கி படையணியின் குழு தளபதி மற்றும் புலனாய்வு அதிகாரி, 20வது பெட்டரியின் பெட்டரி கெப்டன், 9வது கள படையணியின் நிறைவேற்று அதிகாரி மற்றும் 14வது ரொக்கெட் படையணியின் 141வது ரொக்கெட் பெட்டரியின் பேட்டரி தளபதி, இலங்கை பீரங்கி படையணி நிலையத்தில் பணி நிலை அதிகாரி 3 (பதில்), 9வது கள படையணி 91வது பெட்டரியின் பெட்டரி தளபதி, மற்றும் பீரங்கி பிரிகேட்டின் பிரிகேட் மேஜராகவும் பணியாற்றினார். 6வது கள படையணியின் 17வது பெட்டரியின் பெட்டரி தளபதியாகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் பட்டபடிப்பு மையத்தில் பயிற்சியாளராகவும் தனது கடமைகளைத் தொடர்ந்தார். மேலும், பீரங்கி படையணி தலைமையகம் மற்றும் இலங்கை பீரங்கி படையணியின் பணி நிலை அதிகாரி 1 ஆகிய நியமணங்களை வகித்துள்ளார்.
சூடான் ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ கண்காணிப்பாளர்,சர்வதேச அளவில் பங்களிப்பு வழங்கினார். மேலும் அதிகாரிகள் பட்டபடிப்பு நிலையத்தில் பயிற்சி குழுவின் தலைவர், 8வது நடுநிலை படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளராக உள்நாட்டில் பணியாற்றினார். அவர் பீரங்கி பாடசாலையின் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் கேணல் (நிகழ்வுகள்) மற்றும் கேணல் (நிர்வாகம்) பதவிகளையும் வகித்தார், பின்னர் 613 காலாட் பிரிகேட் தளபதியாகவும் பணியாற்றினார். பின்னர் அவர் ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளராகவும், 14வது காலாட் படைபிரிவின் பிரதி தளபதி, இறுதியாக 11வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றுகிறார்.
இலங்கை இராணுவத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இளம் அதிகாரிகளுக்கான தயார்படுத்துதல் பாடநெறி, அடிப்படை புலனாய்வு பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்சி பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, மற்றும் சாத்தியமான பார்வையாளர் மற்றும் பணியாளர் அதிகாரிகள் பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பட்ட படிப்புகளை சிரேஷ்ட அதிகாரி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இந்தியா - பீரங்கி இளம் அதிகாரிகள் (களம்) பாடநெறி, பாகிஸ்தான் மல்டி-பெரல் ராக்கெட் லோஞ்சர் பாடநெறி, பாகிஸ்தான் இடைநிலை தொழிற்கல்வி பாடநெறி, இந்தியா தொடர் துப்பாக்கி பணிநிலை பாடநெறி, சீனா பீரங்கி படையலகு தளபதிகள் பாடநெறி, கென்யா சமூக அடிப்படையிலான அனர்த முகாமைத்துவ பயிற்சி பாடநெறி மற்றும் ஐக்கிய இராச்சிய சிரேஷ்ட தலைவர்களுக்கான ஒருமைப்பாட்டை உருவாக்குதல் பாடநெறி உள்ளிட்ட பல வெளிநாட்டு பயிற்சித் திட்டங்களையும் அவர் பின்பற்றியுள்ளார்.
கல்வி சாதனைகளைப் பொறுத்தவரையில், சிரேஷ்ட அதிகாரி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் (முகாமைத்துவ) முதுகலை பட்டபடிப்பு, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் உறவுகள் மற்றும் மனித வள முகாமைத்துவ முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள்,கல்லூரி பட்டபடிப்பு சுற்றுப்பயணம் மற்றும் 2018 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு போன்ற சர்வதேச கந்துரையாடல்களிலும் பங்கேற்றுள்ளார்.