24th June 2025
இராணுவ பதவி நிலை பிரதானியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 36 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 ஜூன் 23 ஆம் திகதி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 1989 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 31 இல் இணைந்தார். இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1990 ஒக்டோபர் 05 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட அவர் 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி, 2025 ஜூன் 26 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் தற்போது இராணுவ பதவி நிலை பிரதானியாகவும், கஜபா படையணியின் படைத் தளபதியாகவும், இலங்கை இராணுவ விளையாட்டுக் குழுக்களின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.
மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். 4 வது கஜபா படையணியின் குழுத் தளபதி, 3 வது கஜபா படையணியின் குழுத் தளபதி மற்றும் நிறைவேற்று அதிகாரி, 3 வது மற்றும் 4 வது கஜபா படையணிகளின் அதிகாரி கட்டளை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் படைத் தளபதி மற்றும் குழுத் தளபதி, 534 வது மற்றும் 524 வது காலாட் பிரிகேட் தலைமையகங்களின் பிரிகேட் மேஜர், இராணுவச் செயலாளர் பிரிவில் பணிநிலை அதிகாரி 2 (மேலதிக), 9 வது மற்றும் 3 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா சபையின் அமைதி காக்கும் படையில் யூ1 பிரிவின் பணிநிலை அதிகாரி (நிர்வாகம்) ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
மேலும், 8 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, கஜபா படையணி தலைமையகத்தில் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பீடாதிபதி, 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் பொதுப் பணிநிலை, 511 வது காலாட் பிரிகேட் பதில் தளபதி, இராணுவ தலைமையகத்தின் ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளர்/ஊடக பேச்சாளர், இராணுவச் செயலாளர் பிரிவில் உதவி இராணுவச் செயலாளர், 52 மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதி, இராணுவச் செயலாளர், நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம், இராணுவ தலைமையகத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, பிரதி பதவி நிலை பிரதானி ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளதுடன் இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ விளையாட்டுக் குழுக்களின் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.
சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது அர்ப்பணிப்பு மற்றும் வீரம் மிக்க சேவையை கௌரவிக்கும் வகையில் ரண விக்கிரம பதக்கம் (இரண்டு முறை) மற்றும் ரண சூர பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டுள்ளது.
தந்திரோபாய குழு கட்டளையாளர் பாடநெறி (நிலை II), குழு கட்டளையாளர் பாடநெறி (நிலை III), நிறுவன கட்டளையாளர் புதுப்பிப்பு பாடநெறி, படையணி நிர்வாக பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலையாளர் பாடநெறி, இந்தியாவில் ஆரம்ப அதிகாரவாணை பயிற்சி பாடநெறி, இந்தியாவில் படையணி சமிக்ஞை அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி, ஹைட்டியில் இராணுவ தூண்டல் பயிற்சி பாடநெறி, உகாண்டாவில் ஐக்கிய நாடுகள் சபை-சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பயிற்சி பாடநெறி, கொரியா குடியரசில் தேசிய பாதுகாப்பு பாடநெறி மற்றும் கொரியா குடியரசில் கொரிய மொழி பாடநெறி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவ பாடநெறிகளை சிரேஷ்ட அதிகாரி கற்றுள்ளார்.
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வு நிலையத்தில் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களில் டிப்ளோமா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டத்தையும் சிரேஷ்ட அதிகாரி பெற்றுள்ளார்.