30th April 2026
மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ்.வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள், 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 29 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ்.வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள் 1992 பெப்ரவரி 10 ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 37 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் மற்றும் தியத்தலாவ பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் தனது இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1992 டிசம்பர் 19 இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை பீரங்கி படையணியில் பணியமர்த்தப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 மார்ச் 31 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மே 04 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும் போது 16வது காலாட் படைப் பிரிவின் (முன்னர் 61-வது காலாட் படைப் பிரிவு) தளபதியாகப் பதவி வகிப்பார்.
தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 4 வது களப் இலங்கை பீரங்கி படையணி, 4 வது களப் இலங்கை பீரங்கி படையணியின் 9வது பெற்றரி, 8 நடுத்தரப் இலங்கை பீரங்கி படையணி மற்றும் 9 களப் இலங்கை பீரங்கி படையணி ஆகியவற்றின் குழு தளபதி, 9 களப் இலங்கை பீரங்கி படையணியின் நிறைவேற்று அதிகாரி, இராணுவத் தலைமையகத்தில் நிறைவேற்று பணிப்பாளர் கிளையின் பணிநிலை அதிகாரி 3, இராணுவத் தலைமையகத்தின் திட்டமிடல் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2(பதில்), இலங்கை பீரங்கி படையணியின் 16 (உதவிப்படை) படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, பீரங்கி படையணி பாடசாலையில் பயிற்றுவிப்பாளராகவும் (பீரங்கிச் சுடுதல் பயிற்றுவிப்பாளர்), பாதுகாப்புப் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் திட்ட அதிகாரியாகவும், 16 (உதவிப்படை) இலங்கை பீரங்கி படையணி மற்றும் 6 வது களப் இலங்கை பீரங்கி படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் அவர், ரணவிரு சேவா அதிகாரசபையில் இலங்கை இராணுவத்தின் விருசர சிறப்புரிமை அட்டைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், இலங்கை இராணுவத் தலைமையக அதிகாரிகள் கிளையின் பணிநிலை அதிகாரி 1 (பதவி நியமனம்), கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர், வெலிகந்த சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணிநிலை அதிகாரியாவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கூறிய நியமனங்களைத் தவிர, அவர் காலாட் படைப்பிரிவு மற்றும் பிரிகேட் மட்டங்களில் பொது பணிநிலை அதிகாரி 1 (நடவடிக்கைகள்), கேணல் பொது பணிநிலை, காலாட் பிரிகேட் தளபதி மற்றும் காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி போன்ற பல்வேறு கடமைகளை வகித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி, இளம் அதிகாரிகள் பயிற்சி, அடிப்படைப் புலனாய்வுப் பயிற்சி, அதிகாரிகளுக்கான படையலகு கணக்கீடுகள் பயிற்சி, சிரேஷ்ட கட்டளைப் பயிற்சி, சாத்தியமான இராணுவ கண்காணிப்பாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பயிற்சி, ஐக்கிய நாடுகள் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்புப் பயிற்சி, ஐக்கிய நாடுகள் வழங்கல் அதிகாரிகள் பயிற்சி மற்றும் தேசியப் பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள் பயிற்சி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அவரது வெளிநாட்டுப் பயிற்சிகளில், இந்தியா பீரங்கி படை இளம் அதிகாரிகள் பயிற்சி, பாகிஸ்தான் இடைநிலை தொழிற்கல்வி பாடநெறி, பாகிஸ்தான் களப் பொறியியல் மற்றும் நீர்த்திறன் பயிற்சி, பங்களாதேஷ் அதிகாரிகள் பீரங்கி பணிநிலை பயிற்சி மற்றும் சீனா தளபதிகள் பயிற்சி ஆகியவை அடங்கும்.
தனது இராணுவத் தகுதிகளுக்கு மேலாக, சிரேஷ்ட அதிகாரி பங்களாதேஷ் தொழிற்துறை நிபுணர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுநிலை அறிவியல் (தொழில்நுட்பம்) பட்டத்தையும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இருந்து தேசியப் பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகளில் முதுநிலை அறிவியல் பட்டத்தையும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய போதைப்பொருள் ஆலோசனைச் சான்றிதழ் கற்கையையும் நிறைவுசெய்துள்ளார்.