27th April 2026
மேஜர் ஜெனரல் கே.டி.யூ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 27 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் கே.டி.யூ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1993 ஜனவரி 04 ஆம் திகதி பாடநெறி 39 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், 1994 ஏப்ரல் 09 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் விஜயபாகு காலாட் படையணியிலும் விசேட படையணியிலும் பணியமர்த்தப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2026 மார்ச் 22 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மே 02 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும் போது செனஹச கல்வி வள மற்றும் ஆராய்ச்சி தகவல் நிலைய தளபதியாக பதவி வகிக்கின்றார்.
தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 2வது விசேட படையணியின் ‘இ’ பிரிவின் குழுத் தளபதி, விசேட படையணி தலைமையகத்தின் உணவு மேலாளர், விசேட படையணி படையணி தலைமையக பிரிவின் ஆட்சேர்ப்புப் பிரிவின் அதிகாரி கட்டளை, விசேட படையணி படையணி தலைமையக பிரிவின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), விசேட படையணி படையணி தலைமையக பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, விசேட படையணி படையணி தலைமையகத்தின் நலன்புரி நிதிய பிரிவின் பொறுப்பதிகாரி, மற்றும் விசேட படையணி படையணி தலைமையக படையலகு கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
மிஹிந்து செத் மெதுரவின் சிரேஷ்ட ஆலோசகர், மிஹிந்து செத் மெதுரவின் பிரதி தளபதி, அபிமன்சல 1 (அனுராதபுரம்) தளபதி மற்றும் செனஹாச கல்வி வள மற்றும் ஆராய்ச்சி தகவல் நிலைய தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு மூன்று தடவை ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவை பதக்கம், வழங்கப்பட்டன. 1997 ஜனவரி 9 அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரந்தன் தாக்குதலின் போது சிரேஷ்ட அதிகாரி படுகாயமடைந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் இருந்தபோதிலும், அவர் தனது இராணுவப் பணி முழுவதும் தனது கடமையுணர்வைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்தார்.
சிரேஷ்ட அதிகாரி, விசேட படையணி அடிப்படைப் பயிற்சி, அடிப்படைத் குறிபார்த்து சுடல் பயிற்சி மற்றும் சமநிலைப் பாணிப் பயிற்சி உள்ளிட்ட பல உள் நாட்டு பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.
தமது இராணுவத் தகுதிகளுக்கு மேலாக, சிரேஷ்ட அதிகாரி அவர்கள், ஐடிஎம் கணினி பயிற்சி (தனியார்) நிறுவனத்தில் கணினிப் பயிற்சி, ஐபிஎம் நிறுவனத்தில் மனிதவள முகமைத்துவ தொழில்முறைத் தகுதி, ஐடிஎம் கணினி பயிற்சி (தனியார்) நிறுவனத்தில் தனிநபர் கணினி பொருத்துதல், வலையமைப்பு மற்றும் பயனர் தொழில்நுட்ப ஆதரவில் பயிற்சி, மனிதவள முகாமைத்துவ ஒரு சான்றிதழ் படிப்பு, இலங்கை ஐபிஎம் நிறுவனத்தில் மனிதவள முகாமைத்துவத்தில் ஒரு தேசியப் பட்டயம், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நிர்வாகிகளுக்கான சட்டத்தில் ஒரு சான்றிதழ் படிப்பு, இலங்கை அறக்கட்டளையில் கலந்தாய்வில் ஒரு பட்டயம் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் (பாதுகாப்பு பயிற்சி பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.