24th April 2026
மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவித்தான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள், 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவித்தான யூஎஸ்எடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 1990 ஜூலை 14 ஆம் திகதி பாடநெறி 34 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், 1992 ஜூன் 06 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கவச வாகன படையணியில் பணியமர்த்தப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2023 ஓகஸ்ட் 19 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மே 06 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும் போது இராணுவத் தலைமையகத்தின் பொது பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 1 வது மற்றும் 3 வது இலங்கை இலோசாயுத காலாட் படையணி குழு தளபதி, 3 வது கவச வாகன படையணி படைத் தலைவர், 6 வது கவச வாகன (உதவிப்படை) படையணி அதிகாரி கட்டளை, கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தில் உள்ள ஆட்சேர்ப்பு பயிற்சி பிரிவின் அதிகாரி கட்டளை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் பிரிவு தளபதி, 6 வது கவச வாகன (உதவிப்படை) படையணி, கவசப் படை பயிற்சி நிலையத்தில் பிரதான பயிற்றுவிப்பாளர், 9 வது கவச வாகன (உதவிப்படை) படையணி பதிலி கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் இலங்கை படை குழுவின் பிரதி குழு தளபதி, 6 வது கவச வாகன (உதவிப்படை) படையணி கட்டளை அதிகாரி, 3 வது கவச வாகன படையணி கட்டளை அதிகாரி மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பணிப்பாளர் ஆகிய நியமனங்களை வகித்துள்ளார்.
அவரது பதவிக்காலத்தில், அவர் கவச வாகன படையணி பயிற்சி நிலைய பதில் தளபதி, கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக கேணல் பொதுபணி, கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக பதில் பிரிகேடியர் (பொதுபணி), இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிளையின் கேணல் (நிறைவேற்று பணிப்பாளர் நாயகம்), பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள்; கல்லூரியில் பிரிகேடியர் (ஒருங்கிணைப்பு), இராணுவத் தலைமையகத்தில் பணிநிலை கடமைகள் பணிப்பாளர் நாயகம், கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத்த தளபதி, இலங்கை கவச வாகன படையணியின் தளபதி மற்றும் இராணுவத் தலைமையக பொதுப்பணி பணிப்பாளர் நாயக கிளை பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மேற்கூறிய நியமனங்களுக்கு மேலதிகமாக, அவர் காலாட் படைப்பிரிவு மற்றும் பிரிகேட் மட்டங்களில் பொதுப்பணிநிலை அதிகாரி 3, பிரிகேட் மேஜர், பொதுப் பணிநிலை அதிகாரி 1, காலாட் பிரிகேட் தளபதி மற்றும் கட்டளைத் தளபதி போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இளம் அதிகாரிகள் பாடநெறி, பார் எக்ஸலன்ஸ் பாடநெறி, கனிஷ்ட பணிநிலை பாடநெறி, நடவடிக்கை பணிநிலை கடமைகள் பாடநெறி, ஆயுத மோதல் சட்டப் பாடநெறி, இராணுவக் கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, ஐக்கிய நாட்டின் சாத்தியமான பார்வையாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, உலகளாவிய அமைதி செயல்பாடுகள் முன்முயற்சி ஐக்கிய நாட்டின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி மற்றும் ஐக்கிய நாடுகள் பணி அறிமுகப் பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். வெளிநாட்டுப் பயிற்சிகளில் பாகிஸ்தான் கவச படை இளம் அதிகாரிகள் அடிப்படைப் பாடநெறி, இந்தியா வானொலி பயிற்றுவிப்பாளர் பாடநெறி, ஹைட்டி இராணுவ அறிமுகப் பயிற்சிப் பாடநெறி, ஹைட்டி ஐக்கிய நாடுகள் பணி அறிமுகப் பாடநெறி, இந்தியா போர்க் குழுத் தளபதிகள் பாடநெறி, இந்தியா போர்க் குழுத் தளபதிகள் பாடநெறி மற்றும் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரிப் பாடநெறி ஆகியவை அடங்கும்.
தமது இராணுவத் தகமைகளுக்கு மேலாக, அந்த சிரேஷ்ட அதிகாரி களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.