24th October 2025
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் டி.சீ. மகாதந்தில பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் டி.சீ. மகாதந்தில பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் தொண்டர் படையணி பாடநெறி - 05 இல் பயிலிளவல் அதிகாரியாக 1991 டிசம்பர் 26 ஆம் திகதி இணைந்தார். தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1992 ஜூன் 06 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இராணுவ முன்னோடி படையணியில் நியமிக்கப்பட்டார்.
பின்னர், அவர் இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் இணைக்கப்பட்டு, 1996 ஜூன் 06 ஆம் திகதி இராணுவ புலனாய்வு படையணியில் பணியமர்த்தப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 ஒக்டோபர் 31 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறவுள்ள சிரேஷ்ட அதிகாரி தற்போது வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 6 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் (வெலி ஓயா) குழு தளபதி, இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் குழு தளபதி, 6 வது காலாட் பிரிகேட் (யாழ்ப்பாணம்) தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரி, 54 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி, 55 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி, 1 வது இராணுவ புலனாய்வுப் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 22 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி, 11 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி, இராணுவ புலனாய்வுப் படையணி தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரி, 2 வது இராணுவ புலனாய்வுப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை குழுவின் சிரேஷ்ட மதிப்பீட்டு அதிகாரி, 1 வது இராணுவ புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி, 5 வது இராணுவ புலனாய்வு படையணியின் கட்டளை அதிகாரி, பாரிஸில் உள்ள இலங்கை தூதரகத்தின் முதல் செயலாளர் (பாதுகாப்பு), இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் (வெளிநாட்டு புலனாய்வு), இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய தளபதி, இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் கேணல் (புலனாய்வு), பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரி, இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர், மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் திட்ட அதிகாரி மற்றும் இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன் தற்போது வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியாக பதவி வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரி, அடிப்படை புலனாய்வு பாடநெறி, நிறைவேற்று அதிகாரி பாடநெறி, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் அதிகாரி பயிற்றுவிப்பாளர்களுக்கான சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்ட பயிற்றுனர்கள் பாடநெறி, இலங்கையின் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதப்படை அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டம் குறித்த மேம்பட்ட புத்தாக்கப் பயிற்சி பாடநெறி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆயுத மோதல் சட்ட பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய பொது பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பாடநெறிகளை பயன்றுள்ளார்.
பங்களாதேஷில் அடிப்படை புலனாய்வுப் பாடநெறி, அமெரிக்காவில் அடிப்படை புலனாய்வு அதிகாரிகள் பாடநெறி, அமெரிக்காவில் இராணுவ புலனாய்வு கெப்டன்கள் தொழிற்துறை பாடநெறி, ஆஸ்திரேலியாவில் முகவர் செயல்பாட்டு நேர்காணல் திறன்கள் பாடநெறி மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் சர்வதேச புலனாய்வு பணிப்பாளர் பாடநெறி ஆகிய செளிநாட்டு பாடநெறிகளையும் சிரேஷ்ட அதிகாரி பயின்றுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் அனர்த்த முகாமைத்துவ சான்றிதழையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் அமைதி ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும், அதே பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் அமைதி ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும் சிரேஷ்ட அதிகாரி பெற்றுள்ளார்.