15th May 2026
மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மே 04 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 1991 ஜனவரி 04 ஆம் திகதி குறுகிய பாடநெறி 03 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், 1992 டிசம்பர் 19 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுனு ஹேவா படையணியில் பணியமர்த்தப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 மே 20 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மே 20 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும் போது கெமுனு ஹேவா படையணி படைத்தளபதி மற்றும் 58 வது காலாட் படைப்பிரிவு தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.
தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 1 வது கெமுனு ஹேவா படையணி குழுத் தளபதி, 1 வது கெமுனு ஹேவா படையணி புலனாய்வு அதிகாரி, 1 வது கெமுனு ஹேவா படையணி அதிகாரி கட்டளை, 1 வது கெமுனு ஹேவா படையணி பின்னணி தலைமையக அதிகாரி கட்டளை, காலாட் படை பயிற்சி நிலைய நிறைவேற்று அதிகாரி, 1 வது கெமுனு ஹேவா படையணி அதிகாரி கட்டளை, ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை இலங்கைக்கான குழுவின் பணிநிலை அதிகாரி, 9 வது கெமுனு ஹேவா படையணி செயற்பாடு மற்றும் பயிற்சி அதிகாரி, 9 வது கெமுனு ஹேவா படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, யாழ். பாதுகாப்பு படை தலைமையக பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 24 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி, கெமுனு ஹேவா படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 1 (வளங்கல்), கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய தளபதி மற்றும் பதில் நிலைய தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
அவர் ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளராகவும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியாகவும் பணியாற்றுகின்றார்.
மேற்கூறிய நியமனங்களைத் தவிர, அவர் காலாட் படைப்பிரிவு மற்றும் பிரிகேட் மட்டங்களில் பதில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), கேணல் (பொதுப் பணிநிலை), காலாட் பிரிகேட் தளபதி, படைப்பிரிவு பிரதி தளபதி மற்றும் படைப்பிரிவு தளபதி ஆகிய நியமனங்களையும் வகித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு வீர விக்ரம விபுசணய ரணவிக்ரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட அதிகாரி அடிப்படைத் குறிபார்த்து சுடல் பயிற்சி, கனிஷ்ட பணிநிலை அதிகாரி பாடநெறி, அதிகாரிகளுக்கான படையலகு கணக்குப் பயிற்சி பாடநெறி, படையலகு நிர்வாகப் பயிற்சி மற்றும் தேசியப் பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள் பயிற்சி பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.
அவரது வெளிநாட்டுப் பயிற்சி பாடநெறிகளில் பாகிஸ்தானில் நடைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான தந்திரோபாயப் பயிற்சி, இந்தியாவில் நடைபெற்ற இளம் கட்டளைப் பயிற்சி மற்றும் அதிகாரிகளுக்கான படையலகு ஆயுதப் பயிற்சி ஆகியவை அடங்கும்.
தனது இராணுவத் தகைமைகளுக்கு மேலாக, அந்த சிரேஷ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகளில் முதுநிலை அறிவியல் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அனர்த்த பகுப்பாய்வு, முகாமைத்துவ மற்றும் தணித்தலில் முதுநிலை அறிவியல் பட்டத்தையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் அனர்த்த பகுப்பாய்வு மற்றும் முகாமைத்து செயல் பட்டயத்தையும் பெற்றுள்ளார்.