1st September 2025
புகழ்பெற்ற 400 மீட்டர் தேசிய சாம்பியனான இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா, ஜப்பான் டோக்கியோவில் 2025 செப்டம்பர் 13 முதல் 21 வரை நடைபெற உள்ள உலக தடகள சம்மேளனத்தின் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மதிப்புமிக்க உலகளாவிய போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இலங்கை பெண் தடகள வீராங்கனை இவர் ஆவார்.
அதே நேரம், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கோப்ரல் ஆர்ஏஎஸ்ஜே ரணசிங்க அவர்களும் அதே சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஈட்டி எறிதலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.