நாமல்வெவ ஆரம்ப பாடசாலையில் இராணுவத்தினரால் நன்கொடை திட்டம் மற்றும் மருத்துவ முகாம்

3வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படையினர், நாமல்வெவ ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான பாடசாலை பொருட்கள் நன்கொடைத் திட்டம் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றை 2026 மார்ச் 04 ஆம் திகதி பொலன்னறுவை பாடசாலை வளாகத்தில் நடாத்தினர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஏ.எம். பிரேமரத்ன என்டிசீ பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.

ரூ.1,700,000/= பெறுமதியான பாடசாலை பொருட்களுக்கான நிதியுதவியை திரு. ஜீவன் பிரசாத் லியனகே அவர்கள் வழங்கினார். இதற்கு இணையாக, வைத்தியர். நளின் மற்றும் அவரது அர்ப்பணிப்புள்ள மருத்துவக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.