11th August 2025
2025 ஆகஸ்ட் 09 ஆம் திகதி கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் முதலாம் படையின் 8 வது தளபதியாக பதவியேற்றார்.
பிரதான நுழைவாயிலில் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பின்னர் 3 வது கஜபா படையலகினால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மத சம்பிரதாயங்கள் மற்றும் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், புதிய தளபதி சுபநேரத்தில் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் ஒரு மரக்கன்றை நட்டு, அனைத்து நிலையினருடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கடமைகள் மற்றும் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டி படையினருக்கு உரையாற்றினார்.
அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றய நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.