3rd July 2025
இராணுவ உள்ளக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான இரண்டு நாள் பட்டறை 2025 ஜூலை 02 அன்று மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சட்ட அமுலாக்க சந்தர்பங்களில் அதிகாரிகளின் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துதல், அதிகாரத்தை பயன்படுத்துதல், துப்பாக்கிகள், கைது மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நோக்கில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் ஒத்துழைப்புடன் சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த அமர்வுகளை தெற்காசிய ஆயுதப் படைகளின் பிராந்திய பிரதிநிதி பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) லாயிட் கில்லட் ஒபே, தெற்காசிய ஆயுதப் படைகளின் பிராந்திய ஆயுத மற்றும் பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் (இலங்கை) திரு. சன்ன ஜயவர்தன ஆகியோருடன் இணைந்து நடத்தினார்.
இப் பட்டறையில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.