16th July 2025
இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் போர் வீரர்களில் ஒருவரான, ஆனையிறவு முகாமின் பாதுகாப்பிற்காக 34 ஆண்டுகளுக்கு முன்பு தனது உயிரைத் தியாகம் செய்த, இலங்கை சிங்கப் படையணியின் மறைந்த கோப்ரல் காமினி குலரத்னவை 2025 ஜூலை 14 அன்று 6 வது இலங்கை சிங்க படையணி ஆனையிறவு வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னால் ஏற்பாடு செய்த விழாவின் போது நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசி பீஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டார். மறைந்த கோப்ரல் காமினி குலரத்னவின் 34வது நினைவு நாளில் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் விழா ஆரம்பமாகியது அதைத் தொடர்ந்து கூடியிருந்தவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டதுடன் மேலும் உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், அன்றைய பிரதம விருந்தினர் மலர் மாலை அணிவித்து, உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களுக்கும் தனது மரியாதையை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மறைந்த கோப்ரல் காமினி குலரத்னவின் நெருங்கிய உறவினர்கள், ஆனையிறவு சிலை வளாகத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தில் மலர் வளயம்.வைத்து அஞ்சலி செய்தனர்.