11th October 2025
மித்ர சக்தி (XI) 2025 பயிற்சி இந்தியாவின் பெல்காவியில் 2025 நவம்பர் 9 முதல் நவம்பர் 23 வரை நடைபெற உள்ளது. அதற்கமைய பங்கேற்கும் குழுவினருக்கான முன் பயிற்சி பாடநெறி நிகாவேவாவில் உள்ள ஏயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் ஆரம்பமாகியதுடன், இதில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
ஏயர் மொபைல் பிரிகேட் தளபதியும் பயிற்சி பணிப்பாளருமான பிரிகேடியர் டபிள்யூ.ஏ.ஜே. ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன், பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பதற்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்கினார்.