18th February 2026
மஹமேருவ பந்தயம் 1 – 2026 கிரியுல்லவில் உள்ள மஹமேருவ பந்தயப் பாதையில் 2026 பெப்ரவரி 07 மற்றும் 08 ம் திகதிகளில் நடைபெற்றதுடன் இதில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் விளையாட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இராணுவ வீரர்களின் பாராட்டத்தக்க செயல்திறன் பின்வருமாறு:
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.ஏ.டி.ஆர். ஜயஷான் STD 125cc (தேசிய) போட்டியில் முதலிடத்தையும், MX 125cc (தேசிய) போட்டியில் முதலிடத்தையும், STD 250cc (தேசிய) போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் ஜே.என்.எம். ஜயசுந்தர, STD 125cc (தேசிய) போட்டியில் இரண்டாம் இடத்தையும், STD 250cc (தேசிய) போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.
இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய் டி.என். குமார, MX 125cc (தேசிய) போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
கஜபா படையணியின் சிப்பாய் எல்.பி.டி. செனவிரத்ன Super Motard 250cc போட்டியில் (போட்டி 01 - தேசிய) மூன்றாம் இடத்தையும், Super Motard 250cc போட்டியில் (போட்டி 02 - தேசிய) மூன்றாம் இடத்தையும் பெற்றார்.